இந்தியா-பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தினேன் - அதிபர் டொனால்ட் டிரம்ப்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் என்று நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
07:25 AM Jun 26, 2025 IST
|
Web Editor
Advertisement
நெதர்லாந்தில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். இந்தியா, பாகிஸ்தான் சண்டையிட்டால், வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறி அணுசக்தி போரை தடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனை அறிவித்து டிரம்ப், தானே மத்தியஸ்தம் செய்ததாகக் கூறியிருந்தார்.
ஆனால், இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் டிரம்ப் 18வது முறையாக இவ்வாறு பேசியுள்ளார் என காங்கிரஸ் மத்திய அரசை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
Next Article