Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கடவுளை கண்டேன்! பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது..."- மன்சூர் அலி கான் அறிக்கை

11:12 AM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

"கடவுளை கண்டேன்... பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது.." என மன்சூர் அலி கான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து மன்சூர் அலி கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”கடவுளை கண்டேன் ! பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது.  இனி விவசாயிகள் நிலம் பறிக்கப்படாது.  நிலக்கரி சுரங்கத்திற்கென நிலம் புதிதாக எடுக்கப்படாது.  1% N.L.C. மின்சாரத்தை தமிழ்நாடு பயன்படுத்துகிறது.  1018.% ,மின்சாரத்தை கர்நாடகம் செலவழிக்கிறது.  கர்நாடகாவின் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.  தமிழக ஆறுகளின் அடி மட்ட மண் யாவும்.  கேரளா,  கர்நாடகாவுக்கு டன்,  டன்னாய் லாரிகளில் விற்கப்படுகிறது.  அழகான கடவுளின் மனம் குளிர்ந்தது.

துத்துக்குடியில் 13 பேரை சுட்ட போலீஸாரை கடவுள் தூக்கிலே போடட்டும்.  காவிரி டெல்டா விவசாய மண் யாவும் மீட்கப்படும்.  நெடுவாசல் நிறைய  மக்கள் போராடிக் கொண்டே இருக்க,  அதானி துறைமுகங்களில்,  ஏர்போர்ட் வழியாக நித்தம் நித்தம் டன் டன்னாக தங்கமும்,  கோகனும் கடத்திவரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

உலகின் No 1. பணக்காரர்...அதானி, அம்பானி.  ஆனால் நாமோ...அம்பாளை கும்பிடும் ... வெறும் அம்பாநீ.  உப்பு திண்ணவன் தண்ணி குடிக்கனும்.  யாம் அனுப்பியது கடிதம் அல்ல. அறிக்கை! எமை ஆதரித்த யாவரும் முதல் உதிர்த்த வார்த்தை மன்சூரலிகான் செய்தது தவறு.  எனவே இறையச்சத்தோடு வருந்த வேண்டும்.

கடவுள் மனம் குளிர்ந்தது.  5 மாநிலத்தில் "கை" வெல்கிறது ஆறு மாதத்தில் "இ.ந்.தி.யா" வெல்கிறது..  Cast census மூலம் யாவோர்க்கும்.. வேலைவாய்ப்பு.. அழகிய கடவுளே பொதுச்சொத்தை அதானிக்கு விற்றவர்களை தண்டிப்பாயாக!.  ஆதித்தமிழன் சமூகநீதி நிலைநாட்டிய அயோத்திதாஸ பண்டிதர் புகழ் ஓங்குக” என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Tags :
Actor mansur ali khanLeoMansur Ali Khanpress releaseTrisha
Advertisement
Next Article