Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நான் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறேன்" - தென் கொரிய நடிகர் #ParkSeojoon!

11:16 AM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

நான் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறேன், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன் என தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தென் கொரிய நடிகர்களில் பிரபலமானவர் பார்க் சியோ ஜூன். இவர் கில் மீ, ஹீல் மீ, ஷீ வாஸ் பிரிட்டி, பைட் பார் மை வே உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த கியோங்சியோங் கிரியேச்சரின் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இதில், ஹான் சோ-ஹீ, கிளாடியா கிம், வை ஹா-ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன் என பார்க் சியோ ஜூன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

"நான் பாலிவுட்டை மிகவும் விரும்புகிறேன். எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் மேலும் உயரம் செல்வேன். ஒரு நடிகனாக நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் தொடர்ந்து முன்னேறி வரும் நடிகராக இருக்க விரும்புகிறேன்."

இவ்வாறு தென் கொரிய நடிகர் பார்க் சியோ ஜூன் தெரிவித்துள்ளார்.

Tags :
bollywoodcinemanews7 tamilPark Seo JoonSouth Korea
Advertisement
Next Article