Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன்!” - சிறையில் இருந்து வந்தபின் செந்தில் பாலாஜி பேட்டி!

09:52 PM Sep 26, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன் என சிறையில் இருந்து வெளியே வந்தநிலையில் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தொடர்ந்து ஜாமின் கோரிவந்த செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனைத்தொடர்ந்து 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த அவர் இன்று மாலை வெளியே வந்தார்.

வெளியே வந்த செந்தில் பாலாஜியை அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் மலர்தூவி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

வெளியே வந்ததும் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“என்மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. என்மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்காகும். அந்த வழக்கை சட்டரீதியாக, நீதிமன்றத்தில் எதிர்கொண்டு மீண்டு வருவேன். கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன்” என தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags :
BailDMKEDSenthil balajiSupreme court
Advertisement
Next Article