Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

I.N.D.I.A. கூட்டணி பெயர் விவகாரம் - ஒரு வாரத்தில் பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கெடு!

01:54 PM Apr 02, 2024 IST | Jeni
Advertisement

I.N.D.I.A. என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி கெடு வழங்கியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ‘I.N.D.I.A.’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. ‘I.N.D.I.A.’ என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிரிஷ் பரத்வாஜ் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்தியா என்னும் நமது நாட்டின் பெயரை எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக தங்களது கூட்டணிக்கு வைத்திருப்பதாகவும், இது வாக்காளர்களிடம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், I.N.D.I.A. என்னும் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீது ஏற்கனவே பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதன்மீது இன்னும் பதில் அளிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள் : iHeartRadio Music Awards 2024 - விருது வென்ற கே-பாப் கலைஞர்கள்!!

அப்போது மனுதாரர் தரப்பில்,  “மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. ஆகையால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், ஒரு வாரத்தில் எதிர்க்கட்சிகள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் எனவும், இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 10-ம் தேதி வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் எனவும் கூறி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Tags :
ALLIANCEDelhiHCElection2024Elections2024IndiaOpposition
Advertisement
Next Article