Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் எங்கள் நீண்டகால நிலைப்பாடுதான்” - ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என பேசும் வீடியோ குறித்து #Thirumavalavan பதில்!

02:16 PM Sep 14, 2024 IST | Web Editor
Advertisement

“வீடியோ வெளியிட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, அட்மின் பதிவிட்டிருக்கலாம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி” என முன்னர் பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்றை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் இரண்டு முறை பதிவிட்டு, பின்னர் நீக்கிவிட்டார்.

ஏற்கனவே திமுக கூட்டணியோடு முரண்பாடு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி குறித்த வீடியோவை பகிர்ந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் வீடியோ வெளியிட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;

ஆட்சி, அதிகாரம் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கை தான். வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. அட்மின் பதிவிட்டு இருக்கலாம். நான் இப்போதுதான் பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியாது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பழைய வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது;

எதிர்த்துப் பேசக்கூடாது; போராடக்கூடாது; கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது; உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக்கூடாது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது. தமிழ்நாட்டில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சரவையில் பங்கு வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும், இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகள் இதனை கோரினார்களா என்று தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு.

1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது வைத்த முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே. கடைசி மனிதனுக்கும் ஜனநயாகம், எளிய மக்களுக்கும் அதிகாரம். நெய்வேலியில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது தான் இந்த முழக்கத்தை வைத்தேன், அதிகாரத்தை மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள்” என்று வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த விடியோவை முதலில் திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். பிறகு அதனை நீக்கிவிட்டார். மீண்டும் அதனை பதிவிட்டு இரண்டாம் முறையும் அதனை நீக்கியிருக்கிறார்.

Tags :
Coalition GovernmentDMKthirumavalavanVCK
Advertisement
Next Article