Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய மகளிர் அணி குறித்து #MithaliRaj விமர்சனம்! - "கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை!"

09:53 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

அணியில் கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை என இந்திய மகளிர் அணி குறித்து இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் விமர்சித்துள்ளார்.

Advertisement

பெண்கள் டி20 உலகக்கோப்பை  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில், லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் கேப்டனும் இந்திய வீராங்கனையுமான மிதாலி ராஜ் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி விளையாடவில்லை. பேட்டிங் யூனிட்டில் யாருக்கு எந்த ரோல் என்ற புரிதல் இல்லாமல் ஆடினர். பீல்டிங் சரியாக செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இறுதி வரை சென்று தோல்வி கண்டோம்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அணியில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. சிறந்த அணியை வீழ்த்துவது முக்கியம். ஆனால், மற்ற அணிகளை வீழ்த்தி நாம் நிறைவு பெற்றது போல உணர்கிறோம். மற்ற அணிகள் வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அணியின் லோயர் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் இல்லை. தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால் இளம் வீராங்கனைகள் உள்ளனர். ஸ்மிருதி, ஜெமிமா போன்றவர்கள் அணியில் உள்ளனர். ஸ்மிருதி, நீண்ட காலமாக துணை கேப்டனாக உள்ளது கவனிக்கத்தக்கது." இவ்வாறு இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
Cricketindian teamMithali Rajnews7 tamilSportsWomens T20 Cricket
Advertisement
Next Article