Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்தை கேள்விப்பட்டுள்ளேன்” - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்!

12:19 PM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

“சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக நான் பல ஆண்டுகளாய் கேள்விப்பட்டு உள்ளேன்.  ஆனால் எனது திரைப்படங்களில் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை” என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை சாலிகிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  உணவகத்தை
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம்.
குழுமத்தின் சேர்மன் ரவி பச்சமுத்துவின் மனைவி பத்மபிரியா ஆகியோர் கலந்து
கொண்டனர்.

உணவகத்தை திறந்து வைத்த பின்னர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,

"நான் தயாரித்த படங்கள் மீண்டும் ரிலீஸ் வாய்ப்பு உள்ளது.  கில்லி படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டதால் இயக்குநருக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.  ரசிகர்கள் விரும்பியதால் அனைவரும் அந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

எந்த படங்கள் நன்றாக உள்ளதோ அதை தான் மக்கள் விரும்புவார்கள்.  சிறிய தொகையில் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவது நல்லது.  அது எப்பவும் நடைபெறுவது தான்.
அன்று புரியாத புதிர்,  சேரன் பாண்டியன்  போன்ற சிறிய தொகையில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றதால் தான் இன்று நான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளேன். எந்த நடிகரையும் வைத்து படம் எடுக்க வாய்ப்பு கேட்கவில்லை. வாய்ப்பு வரும்போது அதனை பயன்படுத்திக் கொள்வேன்.

சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக நான் பல ஆண்டுகளாய் கேள்விபட்டு உள்ளேன்.  ஆனால் எனது திரைப்படங்களில் அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

கில்லி ரீ ரிலிஸால் ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையா என்ற கேள்விக்கு,  படம் நல்லா இருந்தா தியேட்டர்கள்  அதிகமாக கிடைக்கும்.  ரத்னம் படம் நல்லா இருந்தால் அதுபோன்று வசூலிக்கப்போகிறது இதில் என்ன” என பதிலளித்தார்.

Tags :
directorKS RavikumarRatnamvishal
Advertisement
Next Article