Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை” - #Starbucks முன்னாள் CEO லஷ்மன் நரசிம்மன்!

10:55 AM Aug 14, 2024 IST | Web Editor
Advertisement

“நான் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை” ஸ்டார்பக்ஸ் முன்னாள் சிஇஓ லஷ்மன் நரசிம்மன் தெரிவித்துள்ளார். 

Advertisement

காபி ஆர்வலர்களிடையே ஸ்டார்பக்ஸ் மிகவும் பிரபலமானது. இந்தியாவிலும், இந்த இந்த நிறுவனத்தின் ரசிகர்களின் பெரும் பட்டாளமே உள்ளது, அதில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் உள்ளனர். தற்போது, ​​ஸ்டார்பக்ஸ் அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் குறித்து செய்திகளில் உள்ளது.

இந்நிறுவனத்தின் இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரி லஷ்மன் நரசிம்மன் பதவி விலகியுள்ளார். லஷ்மணனுக்குப் பதிலாக புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் நிகோலை ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது.

இந்த அறிவிப்பால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனை பதிவுகளுக்கு மத்தியில் நரசிம்மனின் ஒரு பேட்டியும் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் தனது வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்று கூறுகிறார்.

அவர் வீடியோவில் பேசியதாவது: 

"மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்றும், ஸ்டார்பக்ஸில் உள்ள அனைவருக்கும்  மாலை 6 மணிக்குப் பிறகு வேளை நேரம் நீட்டிக்கப்பட்டால், அது பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது' என்றும் கூறினார்.

 

Tags :
brianniccollaxman narasimhanStarbucks
Advertisement
Next Article