Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யை காண கேரளாவில் இருந்து வந்த ரசிகர்!

07:49 AM Apr 19, 2024 IST | Web Editor
Advertisement

சென்னைக்கு வர பணம் இல்லாமல் கடன் வாங்கி வந்ததாக நடிகர் விஜய்யை காண கேரளாவில் இருந்து வந்த ரசிகர் தெரிவித்தார். 

Advertisement

லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்,  வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார்.  இது விஜய்யின் 68-வது படமாகும்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த்,  வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மதுரை சித்திரை திருவிழாவின் 7ம் நாள்: நந்திகேசுவரர் – யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி – சுந்தரேஸ்வரர்!

இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும்,  அதில் அப்பா,  மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து சமீபத்தில் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,  கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ளது.  இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க,  நடிகர் விஜய் ரஷ்யாவிலிருந்து நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில்,  கேரளாவில் இருந்து நடிகர் விஜய்யை காண,  அவரின் தீவிர ரசிகர் ஒருவர், கபாலீஸ்வரர் நீலாங்கரை பகுதியில் இருக்கக் கூடிய வாக்குப்பதிவு மையத்திற்கு முன்பாக  காத்திருக்கிறார்.  இதையடுத்து,  சென்னைக்கு வர பணம் இல்லாமல் கடன் வாங்கி இரவு தான் வந்தேன் என்றும்,  உணவு உறக்கம் இல்லாமல் நடிகர் விஜய்யை காண வீட்டிற்கு சென்றதாகவும்,  காவல்துறையினர் அங்கு அனுமதிக்காமல் அனுப்பியதாகவும்,  அந்த நபர் தெரிவித்தார்.

Tags :
actorChennaiElectionfansKeralaTamilNaduvijay
Advertisement
Next Article