Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது எனக்கு மிகப்பெரிய பெருமை " - சச்சினின் பாராட்டுக்கு விராட் கோலி நெகிழ்ச்சி

09:37 AM Nov 06, 2023 IST | Web Editor
Advertisement

"எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது எனக்கு மிகப்பெரிய பெருமை " என  சச்சின் டெண்டுல்கரின்  பாராட்டுக்கு விராட் கோலி நெகிழ்ச்சியோடு பதில் அளித்துள்ளார்.

Advertisement

உலகக் கோப்பையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.  இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர்.

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. குயிண்டன் டி காக் 5 ரன்களிலும், கேப்டன் டெம்பா பவுமா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென்னாப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.. இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் சதம் அடித்தது அவருக்கு மேலும் சிறப்பானதாக அமைந்தது.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்:

இந்த நிலையில் விராட் கோலியின் இந்த சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் விராட் கோலிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக விராட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது.

” எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது எனக்கு மிகப்பெரிய பெருமை. இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம், நான் கடந்து வந்த நாட்கள் மற்றும் நான் சச்சினின் ஆட்டத்தை டிவியில் பார்த்து வளர்ந்தது வந்தவன். அவரிடம் இருந்து பாராட்டுகள் கிடைப்பது மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன் “ என  விராட் கோலி தெரிவித்துள்ளார்.

 

Tags :
ODI 100Sachin TendulkarVirat KholiVirat Kohli Breaks Sachin Tendulkar's Record
Advertisement
Next Article