Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் ஒரு இஸ்லாமியன், ஒரு இந்தியன் என்பதை பெருமையுடன் சொல்வேன்” - முகமது ஷமி

09:22 AM Dec 14, 2023 IST | Jeni
Advertisement

பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமெனில், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி, மைதானத்தில் பிரார்த்தனை செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக் கொண்டு பின் வாங்கியதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முகமது ஷமி, “நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? நான் யாரையும் பிரார்த்தனை செய்வதில் இருந்து தடுக்க மாட்டேன். நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், அதைச் செய்வேன். இதில் என்ன பிரச்னை? நான் ஒரு இஸ்லாமியன், நான் ஒரு இந்தியன் என்பதை பெருமையுடன் சொல்வேன். அதில் என்ன பிரச்னை?

நான் பிரார்த்தனை செய்ய யாரிடமாவது அனுமதி கேட்க வேண்டும் என்றால், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்? இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா? நான் பலமுறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளேன். எங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CricketIndiaMohammedShami
Advertisement
Next Article