"நான் வெறும் டிரெய்லர் தான், திமுக தலைவர் தான் மெயின் பிக்சர்" - கடலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
"நான் வெறும் டிரெய்லர் தான், நமது திமுக தலைவர் தான் மெயின் பிக்சர்" என
கடலூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கடலூர் பாரதி சாலையில் திறந்த வேனில் பிரச்சாரம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
காலை உணவு திட்டம், பிங்க் பஸ் திட்டம் என ஒட்டுமொத்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . "எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்" . தேர்தல்
வருகிறது என்ற காரணத்தினால் சிலிண்டர் விலை,பெட்ரோல் டீசல் விலையை குறைத்து
பிரதமர் மோடி நாடகமாடுகின்றார்.
தெரிவித்தார்.