"இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்" - தவெக தலைவர் விஜய்!
தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்லமுடியாத வேதனை, துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறேன் என்று தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
06:48 AM Sep 28, 2025 IST
|
Web Editor
Advertisement
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article