Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்... 3வது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?

மும்பை அணிக்கு 163 ரன்களை இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் அணி...
09:30 PM Apr 17, 2025 IST | Web Editor
Advertisement

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று  நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

Advertisement

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் மும்பை அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹார்டிக், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று மூன்றாவது வெற்றியை எந்த அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Tags :
IPL 2025MI vs SRHMumbai IndiansSunrisers Hyderabad
Advertisement
Next Article