Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடும்பத் தகராறு - 2 குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!

கோபிசெட்டிபாளையம் குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியுடன் இரு குழந்தைகளும் விசம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
01:13 PM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு பாலாமணி தம்பதியினருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனசேகர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

Advertisement

நேற்று, வண்டுகளை அழிப்பதற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி கணவன், மனைவி ஆகிய இருவரும் உட்கொண்டு தங்களின் 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளனர். இதில் குடும்பத்தில் இருந்த 4 பேரும் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சிகிச்சை பலனின்றி தனசேகர் மற்றும் அவரது மனைவி பாலாமணி உயிரிழந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர்களின் மகள் வந்தனா மற்றும் மோனிஷ் ஆகிய இருவரும் தற்போது உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ErodefamilySuicide
Advertisement
Next Article