Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்காவில் #Vettaiyan | கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

01:42 PM Oct 12, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரிமியர் காட்சிகள், முதல் நாள் காட்சிகளை வழக்கம் போல ஆர்வத்துடன் பார்த்தனர்.

Advertisement

ஜெய்பீம் வெற்றியைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கிய அடுத்தப் படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த 10 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினிக்கு, கேமியோ செய்த ‘லால் சலாம்’ எதிர்பார்த்தளவில் கைக் கொடுக்கவில்லை. இதனால் வேட்டையன் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உருவானது.
 
இந்நிலையில், முதல் நாள் அன்று வேட்டையன் படத்துக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்த்தளவில் வரவேற்பு இல்லை என சொல்லப்பட்டாலும், இரண்டாம் நாள் முதல் குடும்பம் குடும்பமாக சென்று மக்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். வழக்கம் போல அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பிரிமியர் காட்சிகள், முதல் நாள் காட்சிகளை வழக்கம் போல ஆர்வத்துடன் வந்து பார்த்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வேட்டையன் படத்தின் ரசிகர்கள் காட்சி வெகு விமரிசையாக திரையிடப்பட்டது. அக்டோபர் 9ம் தேதி நியூ ஜெர்ஸி மாநில நிர்வாகிகள் செந்தில், பாலா மற்றும் நண்பர்களின் ஏற்பாட்டில் இரண்டு திரையரங்குகளில் வேட்டையன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க் ஹோட்டலில் ஒன்று கூடினார்கள்.

ஹோட்டல் முழுவதும் ரஜினி காந்த் போஸ்டர் மற்றும் கட் அவுட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கே.கே. முருகு பாண்டியன் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், தேங்காய் சூடத்துடன் ஆராதணை, பூசணிக்காய் உடைத்து மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

மேலும், ரஜினிகாந்த் படம் அடங்கிய பிரமாண்டமான கேக் வெட்டப்பட்டது. குழ்ந்தைகள் மற்றும் பெண்களின் சிறப்பு நடனம் நடைபெற்றது. கலந்து கொண்டவர்களுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் ரஜினிகாந்த் இருந்த படங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வகையில் 360 டிகிரி போட்டோ பூத் அமைக்கப்பட்டு இருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் உணவும் வழங்கப் பட்டது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பார்க் ஹோட்டல் உரிமையாளர் சுசீந்தரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

பின் அனைவரும் திரையரங்கு சென்று துள்ளல் ஆட்டத்துடன் வேட்ட்டையன் படத்தை கண்டு களித்துக் கொண்டாடினார்கள். மேலும், வேட்டையன் திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும் அமெரிக்கவாழ் ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.

Tags :
VettaiyanVettaiyan The Hunter
Advertisement
Next Article