Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மழையால் சேதம் அடைந்த பயிர்கள் -நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு !

02:10 PM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

எட்டையாபுரம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு
நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு
வழங்கியுள்ளனர்.

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒரு லட்சம் ஹெக்டேர்
பரப்பளவில் விளைந்த பயிர்கள் மழை வெள்ளத்தினால் சேதம் அடைந்தது . அதனை தொடர்ந்து விவசாய நிலங்களில் உளுந்து,மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் ,கொத்தமல்லி ,சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் கடந்த புரட்டாசி மாதம் பயிரிடப்பட்டன.கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உளுந்து ,வெங்காயம் ,பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது .

அந்த வகையில் மழையால் ஒரு பக்கம் பாதிப்பு எற்ப்பட்டுயிருந்தாலும் மறுபக்கம் காட்டு பன்றிகளால் பயிர்கள் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி ,முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எட்டையபுரம் வட்டாட்சியரிடம் மனு வழங்கினர் . மனு வழங்கும் நிகழ்வின் போது எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜகுமார் மற்றும் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

Tags :
Crops damagedMLANews7Tamilnews7TamilUpdatesRain
Advertisement
Next Article