Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புது அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன்?

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சினிமா துறையில் புது அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
05:40 PM Mar 28, 2025 IST | Web Editor
Advertisement

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கிரிஷ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அந்த வகையில், கடைசியாக இதன் 3ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

Advertisement

இதையும் படியுங்கள் : மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 25 பேர் உயிரிழப்பு?

'கிரிஷ் 3' வெளியாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் ரசிகர்கள் 'கிரிஷ்4' பாகம் எப்போது உருவாகும்? என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 'கிரிஷ் 4' பாகத்தை ஹிருத்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளதாவும், படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

கிரிஷ் 4 படத்தை யாஷ் இப்படம் ரூ. 700 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக பேசப்படுகிறது. இதுவரை நடிகராக கலக்கி வந்த ஹிருத்திக் ரோஷன், தற்போது கிரிஷ் 4 படம் மூலம் இயக்குநராக களமிறங்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
bollywooddirectorhrithik roshanKrrishnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article