Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்

09:45 AM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்ட விவகாரத்தில்,  மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.  அந்த மாநில முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார்.  வரும் மக்களவைத் தேர்தலில் ‛INDIA’ கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது.  அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

இந்தநிலையில்,  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் மார்ச் 14 ஆம் தேதியன்று, கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,  அவருக்கு சிகிச்சை அளித்த மணிமோய் பந்தோபாத்யாய்,  “ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.  அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது.

நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது.  அவருக்கு நரம்பியல்,  இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.  ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னால் இருந்து தள்ளியதால் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கஜாரி பானர்ஜி நிருபர்களிடம் பேசும்போது,  "என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.  ஆனால் யாரோ பின்னால் இருந்து தள்ளப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்" என்று கூறினார்.  இதனால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

மேலும், 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலின் போது,  மம்தா பானர்ஜிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்,  மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அவரை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில்,  தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய் விளக்கம் அளித்துள்ளார்.   அதில், “எங்கள் அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.  பின்னாலிருந்து தள்ளப்பட்டது போல உணர்வு இருந்ததால் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்றே சொன்னோம்.  ஒரு நபர் நிலை தடுமாறி கீழே விழும்போது இவ்வாறு நிகழ்கிறது"  என்று விளக்கம் அளித்தார்.

Tags :
AITCDoctorhospitalMamata banerjeetreatmentWest bengal
Advertisement
Next Article