Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் ஸ்ரீ எப்படி இருக்கிறார்? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்!

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
10:25 AM Apr 18, 2025 IST | Web Editor
Advertisement

வழக்கு எண் 18/9, படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீ. இதையடுத்து அவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்றார். இதனிடையே அவர் சில நாட்கள் பிரபலமான ரியாலிட்டி ஷோ-வில் கலந்துகொண்டார்.

Advertisement

ஸ்ரீ நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு 'இறுகப்பற்று' திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் படங்கள் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் நடிகர் ஸ்ரீ மெலித்த உடலுடன் காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து பலர் சமூகவலைத்தளங்களில் பல்வேறு காரணங்களை கூறி வருத்தம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்ரீ-க்கு இறுகப்பற்று பட தயாரிப்பாளர் முறையான சம்பளம் கொடுக்காததுதான் அவரின் இந்த நிலைமைக்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, “ஸ்ரீ-யின் உடல் நலத்தில் உண்மையிலேயே எனக்கும் அக்கறை உள்ளது. நீண்ட நாட்களாக நானும், அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் ஸ்ரீ-யை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறோம். இதனிடையே பல ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பழையபடி ஸ்ரீயை ஆரோக்கியமாக மீட்டு வருவதே என்னுடைய முதல் நோக்கம். உண்மை என்னவெனத் தெரியாமல் கருத்துகளையும் கதைகளையும் எழுதுபவர்களும் ஸ்ரீயின் பாதிப்பைப் பயன்படுத்தி என்னை தாக்குபவர்கள் முதலில் தங்களை கவனிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, சமூக வலைதளங்களிலிருந்து விலகி சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை நலம் விரும்பிகள், நண்பர்கள், ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அவர் தனது உடல்நலனில் கவனம் செலுத்தி மீண்டும் நலம்பெற அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறான தகவல்களும், வதந்திகளும் எங்களை பாதிக்கிறது.

ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தெரியாமல், தவறான தகவல்களையும், வதந்திகளையும் பகிர்வதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பு ஊடகத்தினரையும் கேட்டுக்கொள்கிறோம். அவரது உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளையும் ஊடக தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தனிப்பட்ட ஒருவரின் நேர்காணல்கள் மூலம் முன்வைக்கும் கருத்துகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். புரிதலுக்கும், அன்புக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி”

இவ்வாறு நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Actor ShriLokesh Kanagarajnews7 tamilNews7 Tamil UpdatesShreetamil cinema
Advertisement
Next Article