”சிறையில் இருந்தவாறு அரசை எவ்வாறு வழிநடத்த முடியும்?”- உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி!
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதாவை தாக்கல் செய்தார்.
இதன்படி, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாள்கள் சிறை வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவை வழங்குகிறது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் சிறையில் இருந்தவாறு அரசை எவ்வாறு நடத்த முடியும்? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு நேர்க்காணலில் இது குறித்து பேசிய அவர்,
“ நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பல தலைவர்கள் சிறைக்கு சென்றுள்ளார்கள், ஆனால் சிறையில் இருந்தவாறு யாராலும் அரசாங்கத்தை வழிநடத்த முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், “குறிப்பாக சிறையில் இருந்தவரே ஆட்சியை வழிநடத்துவது பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சில அமைச்சர்கள், டெல்லியை சேர்ந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் எல்லாம் குற்ற வழக்குகளில் சிறை சென்ற பின்னரும் அரசு பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்து அரசை வழிநடத்தினர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு எதிராகவே இந்த மசோதாவை கொண்டு வந்ததுள்ளார், யார் குற்றம் செய்தாலும் குறிப்பாக பிரதமராகவே இருந்தாலும் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் அதற்கான மசோதாவை மோடி கொண்டு வந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
ஆனால் இதைத்தான் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே எதிர்ப்பதாகவும், அமித்ஷா சாடியுள்ளார்