Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? - #SupremeCourt சரமாரி கேள்வி!

03:17 PM Sep 02, 2024 IST | Web Editor
Advertisement

புல்டோசர் நீதியின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் அவருக்குச் சொந்தமாக வீட்டை அல்லது கட்டத்தை எப்படி இடிக்க முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement

வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்த புல்டோசர் நீதி சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹூசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் இன்று (செப். 2) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும் என்று வாதாடினார்.

கிரிமினல் வழக்கில் தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்தை வைத்து அல்லது அவர் குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவருக்குச் சொந்தமாக வீட்டை அல்லது கட்டத்தை எப்படி இடிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கவாய், இந்த விவகாரத்தில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கட்டிடம் கட்டப்பட்டால் மட்டுமே இதுபோன்ற இடிப்புகள் நடக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

நீதிபதி விஸ்வநாதன், “இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும் பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டது ஏன்? சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராக நான் பேசவில்லை. இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என கூறுகிறேன்” என தெரிவித்தார்.

இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தாவே மற்றும் சி.யு.சிங் ஆகியோர், “மனுதாரர்கள் 50 - 60 ஆண்டுகளாக வசித்து வந்த பூர்வீக வீடுகள் எந்த முன்னறிவிப்புமின்றி இடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் மகன் சரியில்லை என்பதற்காகவோ, வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர் மீது குற்றச்சாட்டு உள்ளதாலோ அடாவடியாக அவரின் வீட்டை இடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?” என கேள்வி எழுப்பினர்.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags :
Bulldozer JusticeDemolition ActionNews7TamilSCISupreme Court of india
Advertisement
Next Article