Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...கவனம் ஈர்க்கும் திரைப்படத்தின் தலைப்பு!

01:28 PM Aug 21, 2024 IST | Web Editor
Advertisement

‘எனக்கு சினிமாவே வேணாம் நான் ஊர்பக்கம் போறேன்’ என்ற படத்தின் தலைப்பு பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 

Advertisement

ஒரு திரைப்படத்தில் எவ்வளவு வேலைப்பாடுகள் இருந்தாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் விஷயங்களில் ஒன்று அப்படத்தின் தலைப்பு. ஏனெனில் தலைப்பு ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகும். கவனத்தை ஈர்க்கும்.

இந்நிலையில் ஒரு புதிய தமிழ்ப்படத்தின் பெயர் கவனம் பெற்றுள்ளது. அப்படி என்ன பெயர் என அனைவரும் யோசிப்பீர்கள். அந்த படத்தின் பெயர்தான் ‘எனக்கு சினிமாவே வேணாம் நான் ஊர்பக்கம் போறேன்’. இப்படத்தை கே.நேசமானவன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என அனைத்து வேலைப்பாடுகளையும் அவரே பார்த்துள்ளார்.

மேலும், “படமெடுத்து பட்டா பட்டிகூட வாங்கமுடியாமல் போன பல தயாரிப்பாளர்களுக்கு இப்படம் ஆறுதல் தரும்” எனவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இப்படத்தின் போஸ்டரானது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக ஆகவேண்டும் என நினைத்து வாழ்க்கையை இழந்து நிற்கும் பலரின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் படமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
எனக்கு சினிமாவே வேண்டாம் நான் ஊர்பக்கம் போறேன்cinemaMovie Name
Advertisement
Next Article