ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘கார்டியன்’ திரைப்படம் எப்படி இருக்கு?
மகளிர் தினத்தை முன்னிட்டு ஹன்சிகா நடித்துள்ள கார்டியன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இதை ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய சபரி - குரு சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர். சிம்பு நடித்த ‘வாலு’, விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர், தனது ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுரேஷ் மேனன், தங்கதுரை, குழந்தை நட்சத்திரம் கிருஷி உட்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த பகுதியில் காண்போம்.
தனக்கும் லக்குக்கும் வெகு தூரமாக இருக்கிறது என்று கவலை கொள்ளும் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் அவர் நினைத்ததெல்லாம் நடக்கிறது. இது எப்படி சாத்தியப்படும் என்று மனநல மருத்துவரிடம் சென்று இதைப்பற்றி கேட்கிறார். அதற்கு மருத்துவர் ஒரு க்ளு கொடுக்க அந்த க்ளூ மூலம் தனக்கு அறிய வருகிறது. அது இறந்து போன ஒரு பெண்ணின் ஆன்மாவை அடைத்து வைத்த ஒரு கல் அந்தக் கல் ஹன்சிகாவிடம் கிடைக்க அதுதான் இந்த நல்ல செயல்களை செய்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கல்மூலம் நிகழும் அமானுஷ்யங்களை கண்டறிகிறார். அதன் பிறகு அந்தக் கல்லுக்கு பின்னாடி இருக்கும் கதை என்ன அது எதனால் இந்த வேலைகளை செய்கிறது என்பதை அறிந்து அந்த பிரச்சனை வந்து வெளியே வருகிறாரா? ஹன்சிகா என்பது தான் படத்தின் மீதி கதை.
படம் பற்றிய அலசல்
திரைப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருக்கிறார். அது அவருக்கு பெரிதாக எடுபடவில்லை. தங்கதுரை மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பெரிதாக scope இல்லை. படம் முழுவதுமே ஹன்சிகா மட்டும்தான் பயணம் செய்கிறார். அழகான ஹன்சிகாவை இடைவேளை வரை காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பின் ஆக்ரோஷ ஹன்சிகாவைக் காட்டியுள்ளார்கள் இயக்குனர்கள்.
படத்தின் இசை அமைந்த விதம் நன்றாக உள்ளது. குறிப்பாக தாய் சென்டிமென்ட் பாடல் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது சாம் சி.எஸ்-கு வாழ்த்துகள்.
மொத்தத்தில் கார்டியன் குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமையும்.
---- சுஷ்மா சுரேஷ்