Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விதிமுறைகளை மீறி வீடு கட்டிய வழக்கு - நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!

03:24 PM Jan 04, 2024 IST | Jeni
Advertisement

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி வீடு கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதி இன்றி கட்டடங்களை கட்டிய நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,  கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில், பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ்,  பாபி சிம்ஹா ஆகியோர் பங்களாக்களை கட்டி வருகின்றனர்.  இதற்கு விதிகளை பின்பற்றாமலும்,  அனுமதி பெறாமல் கட்டட்டங்களை எழுப்பி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.

இதையும் படியுங்கள்:  அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்…

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை
நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் விசாரித்தனர்.  இதில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.  மேலும் வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags :
bobby simhaDindugulkodaikanalMadurai High Courtnews7 tamilNews7 Tamil UpdatesPrakash Raj
Advertisement
Next Article