Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - இஸ்ரேல் தகவல்!

08:20 PM Nov 23, 2023 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடையே வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.  பல முறை தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு சர்வதேச சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை.  இஸ்ரேல், காஸா மீது நடத்தி வரும் தாக்குலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட  13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காஸா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  பல திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். 

அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவர். அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பிணைக்கைதிகளின் விடுதலை என்பது 24-ம் தேதிக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Tags :
AttackBenjamin NetanyahuBring Them Home NowconflictHostagesIsraelIsrael Palestine WarNews7Tamilnews7TamilUpdatesPalestinePalestine israel warwar
Advertisement
Next Article