Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய அணியின் ஜெர்சியில் Host நாடான பாகிஸ்தான் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் - ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பாகிஸ்தான் பெயரை பொறிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஐசிசி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
06:41 PM Jan 22, 2025 IST | Web Editor
Advertisement

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில்,சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மறுப்பு தெரிவித்ததாகவும், துபாயில் இந்திய அணிக்கான போட்டிகள் நடைபெறுவதால் பாகிஸ்தான் பெயரை அச்சிட போவதில்லை என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த ஐசிசி நிர்வாகி ஒருவர், இந்திய அணி துபாயில் விளையாடினாலும், ஹோஸ்ட் நாடான பாகிஸ்தான் பெயரை வீரர்களின் ஜெர்சி, கிட்களில் கட்டாயம் பொறிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
BCCIChampions TrophyCricketICCNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article