Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா தேர்பவனி!

08:39 AM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

புனித மூவரசர் ஆலய திருகாட்சி பெருவிழாவில் மின்னொளி தேர் பவனி மேல தாளங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

குழந்தை இயேசு பிறந்தும் அவரை காணச் சென்ற மூன்று அரசர்களான புனித கஸ்பார்,
புனித மெல்க்யூர், புனித பல்த்தசார் ஆகியோரின் நினைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே முத்து செல்லாபுரம் பகுதியில் மூவரசர் ஆலயம் அமைந்துள்ளது.  இந்நிலையில்,மிகப் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.!

இதன்படி, இந்தாண்டு மூவரசர் திருக்காட்சி பெருவிழா கடந்த வாரம் கொடி
ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முன்புறம் அமைந்துள்ள பிரம்மாண்ட கொடி
கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தம் தலைமையில் நவநாள் திருப்பலிகள் நடைபெற்றது.

மேலும், கேரளா செண்டை மேளம் முழங்க திருவிழா திருப்பலி புனிதர்களின் ஆடம்பர மின்னொளி தேர் பவனியும் இரவை பகலாக்கும் வகையில் வானவெடி நிகழ்ச்சி நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சிகளில் முத்துச்செல்லாபுரம் அருட்தந்தைகள், அருட் சகோதரிகள், கிராம இறை மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
Holy Three KingsMuthu ChellappuramParamakkudyRamanathapuramTherpavaniThirukakshi Festival
Advertisement
Next Article