Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடுமுறை தினம்... சென்னையில் முக்கிய சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

06:24 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மெரினா கடற்கரை முதல், ஜெமினி வரையிலான கதீட்ரல் சாலையில்  2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

Advertisement

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டுள்ளன. 10 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் (பிப். 20) முடிவடைகிறது.

இந்த கண்காட்சிக்கு, வாகனங்களை கொண்டு வருபவர்கள் செம்மொழி பூங்காவுக்கு எதிர்ப்புறம், வாகன நிறுத்தும் இடத்தை ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் செம்மொழிப் பூங்காவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் கதீட்ரல் சாலை முழுவதுமாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல விடுமுறை நாள் என்பதால், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Tags :
ChennaiHeavy TrafficJemini BridgeMarina BeachNews7Tamilnews7TamilUpdatesTraffictraffic jam
Advertisement
Next Article