Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

03:22 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை,  செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (7.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் திருக்கழக்குன்றத்தில் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதே போல்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement
Next Article