“ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்” - திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!
ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், திமுக இளைஞரணி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என்ற தீர்மானம் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு இன்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநாட்டில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்;
- ஆளுநர் பதவி என்பது நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.
- மாநில சுயாட்சி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
- அமலாக்கத்துறையின் மூலம் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.
- நாடாளுமன்றத்தில் எம்.பி.-க்களை இடைநீக்கம் செய்யும் போக்கை கண்டித்தல்.
- நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களிடயே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்ளும் பாஜகவுக்கு கண்டனம்.
- மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக திமுக இளைஞர் அணியினர் செயல்படுதல்.
- நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைத்தல்.
- நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக போராடும்.
- நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைத்தல்.
என மொத்தம் தீர்மானங்கள் திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், திமுக இளைஞரணி மாநாடு மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.