உலக செஸ் சாம்பியன்ஷிப் விளம்பரதாரராக #Google!
உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதன்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்துள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவம்பர் 23ம் தேதி முதல் டிசம்பா் 15 -ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது. நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் டி. குகேஷ் ஆகியோர் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதவுள்ளனர். ஃபிடே, சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்துள்ளது.
செஸ் வரலாற்றில் முதன்முறை இது குறித்து கூகுளின் ஆசிய பசுபிக் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி சிமோன் கான் கூறியதாவது:
"இந்த வரலாற்று நிகழ்வை விளம்பரப்படுத்துவதில் கூகுள் பெருமை கொள்கிறது. செஸ் மனிதனின் புத்திக்கூர்மை, தொழில்நுட்ப திறனையும் இணைத்து விளையாடும் விளையாட்டு. மேலும் இதில் ஏஐ-க்கான களம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதற்குமுன்பாக ஏஐ ஜாம்பவான்களுடன் சிறப்பாக செஸ் விளையாடியதையும் குறிப்பிடத்தக்கது. செஸ் ரசிகர்களுக்கு சாம்பியன்ஷிப் அனுபவத்தை அளிப்பதிலும் செஸ் போட்டியின் அழகினை கொண்டாடுவதிலும் தொடர்ந்து நம்மை உத்வேகமூட்டும் சவாலை அளிக்கும் செஸ் போட்டியை மேம்படுத்த யூடியூப், ஏஐ தேடுதல்கள் மூலம் முயற்சிக்கிறோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : #Madhyapradesh பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மத்திய, மாநில அரசுகள் வெட்கப்பட வேண்டும் – ராகுல்காந்தி கண்டனம்!
சிங்கப்பூர் செஸ் அமைப்பின் சிஇஓ கெவின் கோ கூறியதாவது:
"இந்தாண்டு உலக செஸ் சாம்பிஷன்ஷிப்பை கூகுள் பிரதிநிதித்துவப்படுத்துவது செஸ் மற்றும் சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முதல்முறையாக உலக அளவில் பிரசித்திபெற்ற ஒரு நிறுவனம் செஸ் நிகழ்ச்சியினை விளம்பரப்படுத்துகிறது. செஸ் என்பது பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பான விளையாட்டு. கூகுள் இதில் சிறப்பு கவனம் செலுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது. 138 ஆண்டுகளில் முதன்முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 138 ஆண்டுகளில் முதன்முதலாக ஆசியாவைச் சேர்ந்த இரு வீரர்கள் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விடுதியான சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. நடுவா்கள், வீரா்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.