Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ | #Release எப்போது தெரியுமா?

01:25 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வரும் செப்.20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

படத்தில் நாயகனாக நடிப்பதுடன், இசையும் அமைத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. அத்துடன் படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். இந்த நிலையில், இப்படம் வரும் செப். 20 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Aadhihiphop tamizhaKadaisi Ulaga PorRelease
Advertisement
Next Article