Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட #TheGoat படத்தின் சிறப்பு காட்சிகள் - ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

08:59 AM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டன. விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று (செப். 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே கோட் படம் மற்ற மாநிலங்களில் திரையிடப்படுவதால், வழக்கம் போல் மற்ற மாநிலத்திற்கு அதிகாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியானதை விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கோட் திரைப்படத்திற்கு அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. மேலும் இப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மற்றும் நாளை இரண்டு நாள்களுக்கு கோட் படத்தின் சிறப்புக் காட்சிகளை திரையிட வேண்டும் என்று படக்குழு, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor vijayArchana KalpathigoatGOAT The MovieNews7TamilPremjiThalapathyThe Goat BookingsThe Greatest of All Timevenkat prabhuvijayYuvan shankar raja
Advertisement
Next Article