Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிவேக இணைய சேவை செயற்கைக்கோளான ஜிசாட்-என் 2: விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல்!

07:43 AM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

அதிவேக இணைய சேவைக்கு வழிவகை செய்யும் செயற்கைக்கோளான ஜிசாட்-என் 2 விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், தொலையுணர்வு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இவை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ஆகிய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

இதற்கிடையே இணைய சேவையின் வேகத்தை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-என்2 (ஜிசாட்-20) எனும் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எலான்மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான்-9 ராக்கெட் மூலம் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, “ஜிசாட்-என் 2 சுமார் 4,700 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 14 ஆண்டுகளாகும். இது குறைந்த பட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,000 கி.மீ. தொலைவும் கொண்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. நம்மால் அதிக பட்சம் 4 ஆயிரம் கிலோ வரையிலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும். ஆனால், ஜிசாட்-20 அதைவிட கூடுதலான எடை கொண்டதால் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பால்கன்-9 ராக்கெட் மூலம் அடுத்த சில வாரங்களில் ஜிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் வெற்றி அடைந்தால் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய வசதிகளை பெற முடியும். அதாவது, விநாடிக்கு 48 ஜிபி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை பயனர்களுக்கு கிடைக்கும்” என தெரிவித்தனர்.

Tags :
Broadband InfraGSAT N2ISRONews7Tamilnews7TamilUpdatesSatellitespace X
Advertisement
Next Article