Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம்!

11:40 AM Aug 04, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் :

துப்பாக்கி சுடுதல் :

விஜய்வீர் சித்து, அனிஷ் (ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தகுதி சுற்று), பகல் 12:30 மணியளவில் நடைபெறயுள்ளது. மகேஸ்வரி சவுகான், ரைஜா தில்லான் (பெண்களுக்கான ஸ்கீட் தகுதி சுற்று 2-வது நாள்), பகல் 1 மணியளவில் நடைபெறயுள்ளது.

கோல்ப் :

ஷூபாங்கர் ஷர்மா, ககன்ஜீத் புல்லார் (ஆண்கள் பிரிவின் 4-வது சுற்று), பகல் 12:30 மணியளவில் நடைபெற உள்ளது.

ஆக்கி:

இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் கால்இறுதி ஆட்டம்), பகல் 1:30 மணியளவில் நடைபெற உள்ளது.

தடகளம்:

பாருல் சவுத்ரி (பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் முதல் சுற்று), பகல் 1.35 மணியளவில் நடைபெற உள்ளது. ஜெஸ்வின் ஆல்ட்ரின் (ஆண்கள் நீளம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 2:30 மணியளவில் நடைபெற உள்ளது.

குத்துச்சண்டை:

லவ்லினா (இந்தியா)-லி கியான் (சீனா) (பெண்களுக்கான 75 கிலோ கால்இறுதி), மாலை 3.02 மணியளவில் நடைபெற உள்ளது.

பேட்மிண்டன்:

லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி), மாலை 3:30 மணியளவில் நடைபெற உள்ளது. விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி 7-வது மற்றும் 8-வது பந்தயம்), மாலை 3.35 மணிக்கும், நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி 7-வது, 8-வது பந்தயம்), மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

Tags :
AthleticsIndianAthletesIndianPlayersParisOlympicsParisOlympics2024TeamIndia
Advertisement
Next Article