Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் #HemantSoren !

01:31 PM Nov 24, 2024 IST | Web Editor
Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்கிறார் .

Advertisement

ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணி அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றன.

அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றன. இதைத்தவிர ஜார்கண்ட் ஜனநாயக புரட்சிகர முன்னணி ஒரு தொகுதியை கைப்பற்றியது. பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் (நவ.26) முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்திய கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹேமந்த் சோரன் இன்று மாலை 4 மணிக்கு அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Next Article