Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஹேமந்த் சோரன் கைது - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

02:08 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.  கைது நடவடிக்கைக்கு முன்னதாக முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜிநாமா செய்தார்.

மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.  அத்துடன் புதியமுதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஆளுநர் அழைப்பு விடுத்ததும் அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில்,  ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ள டிவிட்டர் பதிவில்,

“ஹேமந்த் சோரன் கைது மூலம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.  பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விசாரணை அமைப்பு மூலம் துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை. விரத்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் பாஜக ஈடுபட்டுள்ளதை இந்த கைது வெளிக்காட்டுகிறது!” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article