உதகையில் கடும் பனிப்பொழிவு - பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை உறைபனி பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடும் குளிர் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக
பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று உறைபனியின் தாக்கம் அதிகரித்து ஒரு டிகிரி செல்சியஸ்க்கு வெப்பநிலை பதிவாகும் என எதிர் பார்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மதுரையில் பரபரப்பு | அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீஸார் வழக்குப்பதிவு!
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலையில் திடீர்
மாற்றம் ஏற்பட்டு உதகை கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை, சேரிங்கிராஸ், மத்திய
பேருந்து நிலையம், காந்தல், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மலையுடன் கூடிய அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனி பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.