திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!
திருவள்ளூரில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூரில் இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவியது.
திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி
நெடுஞ்சாலை, திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை, திருவள்ளூர் செங்குன்றம் சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளை போர்வை போற்றியது போல் பனிமூட்டம்
காணப்படுகிறது.
இதையும் படியுங்கள் : உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது! வாடிவாசலில் சீறி வரும் காளைகளை தீரத்துடன் அடக்கும் காளையர்கள்!
இந்நிலையில், மூடு பனி காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர். அதேபோல காலை நேரத்தில் நடை பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள்,என பலரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர்.
இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை
வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்று வருகிறார்கள்.
குறிப்பாக, எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க அவதிப்பட்டனர். காலை 8 மணி வரையிலும் பனி குறையாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகினர்.