தென்காசியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித்
தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மழையானது சற்று குறைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவானது அதிகரித்து காணப்பட்டது.
இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு!
குறிப்பாக, தென்காசி, பாவூர்சத்திரம், செங்கோட்டை, குற்றாலம், பண்பொழி, வடகரை,
அச்சன்புதூர், கடையநல்லூர், சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகள் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், கடுமையான பனிப்பொழிவால் சாலைகளில் புகைமூட்டமாக பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலைகளில் பயணித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது முதலே கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மட்டுமல்லாது, விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.