கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
வட கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக்கடலில் சூறாவளி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கன மழைக்கான ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உட்பட 9 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்பதால் கேரள, கர்நாடக, லட்ச தீவு பகுதிகளில் 7 ம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.