Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளுத்து வாங்கும் கனமழை... தண்ணீரில் மிதக்கும் தென்மாவட்டங்கள்...!

10:30 AM Dec 18, 2023 IST | Jeni
Advertisement

தென்மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலையில் கழுத்தளவு தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பைபாஸ் ரோடு பகுதிகளிலிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் அப்பகுதிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Tags :
#affectedFloodHeavyRainNellaiPeopleThooothukudi
Advertisement
Next Article