Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையை புரட்டி போட்ட கனமழை | தற்போதைய நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறுவது என்ன?

02:36 PM Dec 06, 2023 IST | Web Editor
Advertisement

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலைக்குள் மின் விநியோகம் முழுமையாக வழங்கப்படும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில்,  திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில்,  சென்னையின் தற்போதைய நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

புறநகரில் தேங்கிய தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  செம்மஞ்சேரி,  வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் படிப்படியாகக் குறைந்து வருகிறது.  சென்னை,  செங்கல்பட்டு,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த 4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடைபெறும்.

படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்கப்படுகிறது.  அடையாற்றில் 37 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தண்ணீர் தேங்கியுள்ளதால் மின் விநியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4% பகுதிகளில் மட்டுமே இன்னும் மின் விநியோகம் வழங்கப்படவில்லை. உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.  இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது.  சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் திறக்கப்பட்டுள்ளன.  குடிநீரை விநியோகம் செய்பவர்கள் பதுக்கி வைக்கவோ,  அதிக விலைக்கு விற்கவோ கூடாது.  "பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement
Next Article