Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாகிஸ்தானில் கனமழை : உயிரிழப்பு எண்ணிக்கை 750 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
07:58 AM Aug 21, 2025 IST | Web Editor
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி 650 பேர் உயிரிழந்தனர். மேலும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Advertisement

இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கனமழை, வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
Floodheavy rainspakistanRainWorldNews
Advertisement
Next Article