நாகை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை - வெள்ளத்தில் சிக்கி பயிர்கள் நாசம்...
நாகை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 17 செ. மீ. மழை பெய்துள்ளது. நாகையில் 14 செ. மீ. , திருப்பூண்டி, வேதாரண்யத்தில் 11 செ. மீ. , தலைஞாயிறு, கோடியக்கரையில் 10 செ. மீ. மழையும் பெய்துள்ளது.
தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியுள்ளன.
மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுதுள்ள நிலையில், இளம் நெற்பயிர்கள் மழை நீரில் தொடர்ந்து மூழ்கியிருந்தால் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே, மழைநீரை வடிய செய்ய உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.