பீகார் கனமழை - உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு!
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தானியத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பாட்னா, போஜ்பூர், ஷிவான் மற்றும் கயாவில் தலா நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் கோபால்கஞ்ச் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் தலா மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து இடியுடன் நாளந்தா மாவட்ட ஆட்சியர் சஷாங்க் பூபங்கர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்குப் பின் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்மா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு கோயில் மீது மரம் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மழையின் போது பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததாக தங்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே மழைக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்ததோடு தலா ரூ.4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.