Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரியில் தொடரும் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

08:35 AM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக நீலகிரியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், கனமழையின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சமயங்களில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட செயல்பாடுகள் செய்ய வேண்டாம். 

நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது, அதிக மழைப்பொழிவின் போது நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் அத்தகைய நேரங்களில் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், மரம் மற்றும் தடுப்பு சுவர்களின் அடியில் வாகனங்களை நிறுத்தவோ, பொதுமக்கள் நிற்கவோ வேண்டாம்.
மழைப்பொழிவின் போது மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை பொதுமக்கள் தொடவோ அருகில் செல்லவோ கூடாது, மழை காரணமாக இயற்கை இடர்பாடுகளால் பாதிப்புகள் ஏற்படும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையான 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Alertdistrict CollectorHeavy rainfallNews7Tamilnews7TamilUpdatesnilgrisRainTN Rain
Advertisement
Next Article