கனமழை எச்சரிக்கை - உங்கள் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? - Check பண்ணிக்கோங்க!
கனமழை எச்சரிக்கை காரணமாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை காணலாம்.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வ இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், இன்று (டிச.12) சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல தமிழகத்தில் டிசம்பர் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்:
- சென்னை
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- திண்டுக்கல்
- ராமநாதபுரம்
- காஞ்சிபுரம்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- கரூர்
- வேலூர்
- திருவண்ணாமலை
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- சேலம்
- பெரம்பலூர்
- திருநெல்வேலி ( 1ம்வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை)